நேபாளம்
நேபாளம்ENS

மன்னராட்சியா? மக்களாட்சியா? நேபாளத்தில் மீண்டும் போராட்டம்!

நேபாளத்தில் இரு தரப்பினரிடையேயான மோதலைத் தடுத்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்
Published on

நேபாளத்தில் இரு தரப்பினரிடையேயான மோதலைத் தடுத்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நேபாளத்தில் மன்னராட்சி ஆதராவளர்கள் மற்றும் குடியரசு ஆதரவாளர்கள் என இரு தரப்பினரும் ப்ரிகுடிமாண்டப் என்ற பகுதியில் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்த முயன்றனர். இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தால், இரு தரப்பினரையும் கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், தடைசெய்யப்பட்ட பகுதியான நியூ பனேஷ்வரை நோக்கி, ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முயன்றனர். கட்டுப்பாடுகளை மீறி செல்ல முயன்றதால், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகைக் குண்டுகளையும் காவல்துறையினர் பயன்படுத்தினர். இந்த தாக்குதலின்போது, ஆர்பாட்டக்காரர்களில் ஒருவர் காயமடைந்ததாகவும் கூறினர்.

நேபாளத்தில் முன்னர் மன்னராட்சி நடைபெற்று வந்த நிலையில், 2008 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக மக்களாட்சி கொண்டு வரப்பட்டது. இருப்பினும், 17 ஆண்டுகளில் ஒரு பிரதமர்கூட 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யவில்லை.

அரசியல் கூட்டணி குழப்பம், தேர்தல் அரசியல் காரணமாக 17 ஆண்டுகளில் 13 பிரதமர்களை நேபாளம் கண்டுவிட்டது.

இந்த நிலையில், தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீதும் நேபாள மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதால், மீண்டும் தெருக்களில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர். மேலும், மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வருமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com