உலகின் மூத்த பெண் 116 வயதில் மரணம்!

உலகின் அதிக வயதான மனிதர் மரணமடைந்துள்ளதைப் பற்றி...
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண் துறவி இனாஹ் கனாபாரோ லுகாஸ் தனது 116வது வயதில் மரணமடைந்துள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண் துறவி இனாஹ் கனாபாரோ லுகாஸ் தனது 116வது வயதில் மரணமடைந்துள்ளார்.ஏபி
Published on
Updated on
1 min read

உலகின் அதிக வயதான பிரேசில் நாட்டுப் பெண் ஒருவர் 116 வயதில் மரணமடைந்துள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண் துறவி இனாஹ் கனாபாரோ லுகாஸ் (வயது 116). கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதியன்று பிறந்த இவர் 1934-ல் இரண்டாம் உலகப் போர் காலத்தில் தனது 26 வயது முதல் கிறிஸ்தவப் பெண் துறவியாக வாழ்ந்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் உலகின் அதிக வயதுடைய மனிதர் என்று அறியப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த டொமிகோ இடூகா என்பவர் 116 வயதில் மரணமடைந்த நிலையில் அந்தப் பட்டம் லூகாஸ்-க்கு சென்றது.

இந்நிலையில், இனாஹ் கனாபாரோ லுகாஸ்-ம் நேற்று (ஏப்.30) தனது 116 வது வயதில் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவர் வாழ்ந்து வந்த கிறிஸ்தவ மடத்தின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மையார் லூகாஸ் தனது வாழ்க்கையை கடவுளின் பாதையில் முழுவதுமாக அர்பணித்ததாகவும், அவரது நீண்ட வாழ்க்கைக்கான ரகசியம் கடவுள்தான் என்று அவர் கூறி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயது முதலே கிறிஸ்தவப் பெண் துறவியாக வாழ்ந்து வந்த கனாபாரோ லுகாஸின் 110 வது பிறந்த நாள் அன்று மறைந்த போப் பிரான்சிஸ் அவருக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

இந்நிலையில், இவரது மரணத்தினால் உலகின் அதிக வயதுடைய மனிதர் எனும் பட்டம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஈதல் கதெர்ஹாம் என்ற 115 வயது மூதாட்டிக்குச் சென்றுள்ளது.

இத்துடன், தற்போது மறைந்த கனாபாரோ லூகாஸ் அதிக வயது வாழ்ந்ததாகப் பதிவு செய்யப்பட்ட 15வது நபராவார். மேலும், கடந்த 2023-ல் 118 வயதில் மரணமடைந்த கிறிஸ்தவப் பெண் துறவியான பிரான்ஸின் லூசிஸ் ராண்டனின் மறைவுக்கு பின் அதிக வயதுடைய இரண்டாவது பெண் துறவி என கனாபாரோ லுகாஸ் அறியப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com