மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விடியோ அழைப்புக்கான ஸ்கைப் செயலியின் சேவை மே 5 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.
விடியோ அழைப்புகளுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'ஸ்கைப்' செயலியை கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த காலகட்டத்தில் விடியோ அழைப்புகளுக்கு ஸ்கைப் செயலிதான் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் ஸ்கைப் செயலி சேவையை நிறுத்த கடந்த பிப்ரவரி மாதமே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி மே 5 ஆம் தேதி ஸ்கைப் செயலி சேவை நிறுத்தப்படும் என்று அறிவித்தது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மற்றொரு செயலியான 'டீம்ஸ்' செயலியை பயனர்கள், ஸ்கைப்புக்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக டீம்ஸ் சேவை புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.
தற்போது ஸ்கைப் செயலியைப் பயன்படுத்திவரும் பயனர்கள் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் மூலம் எந்தவித உள்நுழைவும் இல்லாமல் டீம்ஸ் செயலியைப் பயன்படுத்தலாம். அதாவது ஸ்கைப் ஐடியைப் பயன்படுத்தி உள்நுழையலாம்.
ஸ்கைப் செயலியில் உள்ள தொடர்புகள், சாட்கள் டீம்ஸ்-க்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். ஸ்கைப்பைவிட டீம்ஸ் செயலியில் மேலும் சில புதிய வசதிகள் இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போல கூகுள் மீட், ஸூம் ஆகிய செயலிகளின் மூலமாகவும் விடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 10 லட்சத்துக்குள் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லாபம் உயா்வு

ஏா் இந்தியா ஊழியா்களுக்குப் புதிய சலுகை: பணித்திறன் அடிப்படையில் பங்குகள் திட்டம்

800 மெகாவாட் திறன் அனல் மின் நிலையம்... ரூ.1,600 கோடி ஆர்டரால் தெர்மாக்ஸ் பங்குகள் உயர்வு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


