பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மியான்மர் நிலநடுக்கம்: இடிந்த தாய்லாந்து கட்டடத்தில் தேடுதல் பணிகள் நிறுத்தம்!

பாங்காக்கில் இடிந்த வானுயர்ந்த கட்டடத்தில் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டது.

News image

நிலநடுக்கத்தினால் பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த வானுயர்ந்த கட்டடம் இடிந்து தரைமட்டமானது. - ஏபி

Updated On :13 மே 2025, 5:12 pm IST

மியான்மர் நிலநடுக்கத்தினால் இடிந்த தாய்லாந்து நாட்டின் வானுயர்ந்த கட்டடத்தின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால், அந்நாட்டில் சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அந்நாட்டை மையமாக வைத்து நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்தையும் பாதித்தது. அங்கு சுமார் 96 பேர் பலியாகினர்.

இதனால், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த அரசுக்குச் சொந்தமான வானுயர்ந்த கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.

இந்த நிலநடுக்கத்தினால் பாங்காக்கில் பாதிக்கப்பட்ட ஒரே கட்டடமும் அதுதான் எனவும் அந்நாட்டில் பலியானவர்களில் பெரும்பாலானோர் இந்தக் கட்டடத்தின் இடிபாடுகளினுள் சிக்கியவர்களே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளினால் சுமார் 89 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், அப்பகுதியிலிருந்த 7 பேர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

எனவே, அங்கு கிடைத்த நூற்றுக்கணக்கான மனித உடற்பாகங்களைச் சோதனை செய்து சிக்கியுள்ளவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவமானது அந்நாட்டில் கட்டப்படும் வானுயர்ந்த கட்டடங்களின் பாதுகாப்புகள் குறித்து கேள்விகளை எழுப்பியது. இதனால், அந்தக் கட்டடத்தை கட்டும் பணியில் ஈடுபட்ட சீன நாட்டைச் சேர்ந்த ஒப்பந்ததார் மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அவரது மூன்று கூட்டாளிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அந்தக் கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட சில இரும்புக் கம்பிகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடிந்த கட்டடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக தாய்லாந்து அதிகாரிகள் இன்று (மே 13) அறிவித்துள்ளனர்.

இருப்பினும், கட்டடம் இடிந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் ஆதாரங்கள் சேகரிக்கும் பணியானது இம்மாத (மே) இறுதி வரை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.