திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

சீனா அசத்துகிறதா? அச்சுறுத்துகிறதா? உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை!

சீனாவில் ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.

News image

சண்டைப் பயிற்சியில் ரோபோக்கள் - Unitree Robotics

Updated On :23 மே 2025, 11:49 am IST

சீனாவில் ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.

சீனாவில் ஹாங்சோ மாகாணத்தைச் சேர்ந்த ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனமான யூனிட்ரீ ரோபோட்டிக்ஸ், உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை போட்டி நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, முன்னோட்டத்தையும் நடத்தி விட்டனர்.

மனித உருவிலான இரண்டு ரோபோக்கள், குத்துச்சண்டை போட்டியாளர்களைப் போன்று கையுறைகள், தலைக்கவசத்தை அணிந்துகொண்டு, போட்டியிடும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. போட்டியில் கலந்து கொள்வதற்காக, ரோபோக்களுக்கு மனிதர்களைப்போல நடக்கவும், ஓடவும், நடனமாடவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான உடல் வலிமை சார்ந்த போட்டிகளில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், ரோபோக்களின் வேகம், செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டு, அதனை அதிகரிப்பது குறித்தும் அறிய முடியும்.

இந்த ரோபோக்களை பயிற்றுவிக்க, மனித இயக்கத்தின் தரவுகள் (Motion capture) பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (மே 25) நடைபெறவுள்ள ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியில் ரோபோக்களை மனிதர்கள் அடங்கிய குழுதான் கட்டுப்படுத்துவர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் ரோபோவுக்கு அயர்ன் ஃபர்ஸ்ட் கிங் (Iron First King) என்ற பட்டமும் வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.