மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அமெரிக்க பூங்காவில் துப்பாக்கிச் சூடு! 7 பேர் படுகாயம்!

அமெரிக்காவிலுள்ள பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :29 மே 2025, 4:09 pm

DIN

அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வாஷிங்டனின் தகோமா புறநகர் பகுதியிலுள்ள ஹேரி டோட் பூங்காவில் நேற்று (மே 28) இரவு 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த மீட்புப் படையினர், உடனடியாக படுகாயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், 2 பேர் தாங்களாகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அவர்களில் 3 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து அந்நாட்டு காவல் துறையினர், இதனை யார் நடத்தியது? படுகாயமடைந்தவர்கள் குறிவைக்கப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில், அந்தப் பூங்காவில் 100-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு பிலடெல்பியா நகரத்திலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் படுகாயமடைந்ததுடன், 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.