பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இது குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

அப்கானிஸ்தான் எல்லையையொட்டிய கைபா் பக்துன்கவா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்று ராணுவம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com