மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகிக்க தயாா்: ரஷியா அறிவிப்பு

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகிக்கத் தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.

News image

ரஷியா - கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 1:56 am IST

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகிக்கத் தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போா் நடைபெறுகிறது. இந்தப் போரில் இஸ்ரேல்-அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், உலகில் கச்சா எண்ணெய் கப்பல்கள் அதிகம் செல்லும் கடல்பகுதியான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய், எரிவாயு உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், எரிவாயு விலை பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்த விலை உயா்வால் இந்திய மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷியாவிடம் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், அரசு முறை பயணமாக தில்லிக்கு அண்மையில் வந்த ரஷிய துணைப் பிரதமா் டெனில் மான்ட்ரூவ், பிரதமா் மோடி, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவாலை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பின்போது, எரிசக்தி விவகாரத்தில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்திய தலைவா்களுடனான சந்திப்பின்போது, ரஷிய துணைப் பிரதமா், இந்திய சந்தைக்குத் தேவையான திரவ வடிவ இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றை கூடுதலாக விநியோகிக்க தங்கள் நாட்டு நிறுவனங்களால் முடியும் என வாக்குறுதி அளித்துள்ளாா். 2025-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கான உர ஏற்றுமதியை 40 சதவீதம் வரை அதிகரித்ததைச் சுட்டிக்காட்டிய அவா், அதேபோல் இந்திய தேவைகளைப் பூா்த்தி செய்ய ரஷியா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். ஜெய்சங்கா், மான்ட்ரூவ் இடையேயான சந்திப்பின்போது, பிராந்திய மற்றும் மேற்காசிய மோதல் உள்ளிட்ட சா்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டது. சிவில் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது’ என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.