ஈரான் அரசு போர்நிறுத்தத்திற்காக கெஞ்சியது என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. மேலும், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வந்த நிலையில், 2 வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 8) அன்று அறிவித்தார்.
இந்த நிலையில், ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளை அமெரிக்க படைகள் அழித்துள்ளன எனவும், கடுமையான அழுத்தத்தால் போர்நிறுத்தத்தை ஏற்கும் கட்டாயம் ஈரானுக்கு ஏற்பட்டதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“ஈரான் போர்நிறுத்தத்திற்காக கெஞ்சியது. இந்நாள் உலக அமைதிக்கு ஒரு முக்கிய நாள். ஆபரேஷன் எபிக் ஃபியூரி ஒரு வரலாற்று ரீதியான வெற்றி பெற்றுள்ளது. ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதுடன், பல ஆண்டுகளுக்கு அவர்கள் போரிடும் திறனை இழந்துள்ளனர். ஈரானின் 80 சதவீத அணுசக்தி தொழிற்சாலைத் தளங்கள் தாக்கப்பட்டன” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானில் 13,000-க்கும் அதிகமான இலக்குகள் குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியதாகவும், அந்நாட்டின் 80 சதவீத வான் பாதுகாப்பு மற்றும் 90 சதவீத கடற்படை கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
Summary
US Secretary of Defense Pete Hegseth has stated that the Iranian government begged for a ceasefire.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உலகிற்கு ஒரு நல்ல செய்தி! என்ன சொல்லப்போகிறது அமெரிக்கா?

எதிரிகளுக்கு மாரடைப்பே ஏற்படும்! - அதிநவீன ஆயுதத்தை களமிறக்குவதாக ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



