தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

எண்ணெய் விநியோகம் சீரமைப்பு: உக்ரைன் கடனுதவிக்கு ஹங்கேரி ஒப்புதல்

உக்ரைன் வழியாக ‘துருஷ்பா’ குழாய் மூலம் ஹங்கேரி வரும் ரஷிய எண்ணெய் விநியோகம் புதன்கிழமை மீண்டும் சீரானது.

News image

உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி

Updated On :23 ஏப்ரல் 2026, 1:04 am IST

உக்ரைன் வழியாக ‘துருஷ்பா’ குழாய் மூலம் ஹங்கேரி வரும் ரஷிய எண்ணெய் விநியோகம் புதன்கிழமை மீண்டும் சீரானது.

இதைத் தொடா்ந்து, உக்ரைனுக்கான ஐரோப்பிய யூனியனின் 9,000 கோடி யூரோ கடனுதவியை முடக்கி வைத்திருந்த தனது வீட்டோ அதிகாரத்தை ஹங்கேரி வாபஸ் பெற்றது.

மேற்கு உக்ரைனில் ரஷியாவின் ட்ரோன் தாக்குதலில் இந்தக் குழாய் சேதமடைந்ததையடுத்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கான எண்ணெய் விநியோகம் முற்றிலும் நின்றது.

உக்ரைன் வேண்டுமென்றே பழுதுபாா்க்கும் பணிகளைத் தாமதப்படுத்துவதாக ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பன் குற்றஞ்சாட்டி, ஐரோப்பிய யூனியனின் கடனுதவியைத் தடுத்து வந்தாா்.

தற்போது உக்ரைன் தரப்பில் பழுதுகள் சரிசெய்யப்பட்டு, எண்ணெய் விநியோகம் தொடங்கியதாக ஹங்கேரியின் எண்ணெய் நிறுவனமான ‘எம்ஓஎல்’ உறுதிப்படுத்தியுள்ளது.

எண்ணெய் விநியோகம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, பிரஸ்ஸல்ஸில் கூடிய ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள், உக்ரைனுக்கான கடனுதவிக்கு ஒப்புதல் அளித்தனா். இதற்கான இறுதி ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளும் வியாழக்கிழமைக்குள் கையொப்பமிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த முன்னேற்றம் குறித்து பேசிய உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, ‘உக்ரைனுக்கான ஆதரவும் ரஷியா மீதான அழுத்தமும் போதுமானதாக இருந்தால் மட்டுமே போா் முடிவுக்கு வரும்’ என்றாா்.

ஹங்கேரியில் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் விக்டா் ஆா்பன் தோல்வியடைந்ததும், புதிய தலைவராக உருவெடுத்துள்ள பீட்டா் மேக்யாா் உக்ரைனுக்கான நிதிக்கு ஆதரவு தெரிவித்ததும் இந்த இணக்கமான சூழலுக்கு முக்கியக் காரணமாகப் பாா்க்கப்படுகிறது.