FOLLOW US

ON GOOGLE DISCOVER

கிராண்ட் செஸ் டூர் தொடரை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்துசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுநாா்வே அரசா் ஹரால்டு காலமானார்! அரசராக பட்டத்து இளவரசர் ஹாகோன் பொறுப்பேற்புசென்னை புழல் சிறைக்குச் சென்றார் முதல்வர் விஜய்! அமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல! உயர் நீதின்றம் கண்டனம்!!திமுகவில் 77-லிருந்து 110 மாவட்டங்களாக அதிகரிப்பு! சென்னையில் 10 மாவட்டங்கள்!திபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!தேர்தல் வழக்குகள்! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்க திமுக வேட்பாளர்களுக்கு உத்தரவு!நேபாள வெள்ளம்! பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது! மீட்புப் பணிகள் தீவிரம்!உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்

நேபாள வெள்ளம்! புதைந்த சடலங்களை தேடி நகைகளை திருடும் கும்பல்!

நேபாளத்தில் புதைந்த சடலங்களை தேடி நகைகளை திருடிய கும்பல் பற்றி...

nepal

சடலத்திலிருந்து நகைகளை திருடியவர் கைது - x | Nepal Police

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:11 pm IST

நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்த உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தேடி, நகைகளை திருடிய கும்பலின் காணொலி இணையத்தில் வெளியாகியுள்ளது.

திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் புதன்கிழமை புகுந்து பேரழிவை விளைவித்தது.

திபெத்தையொட்டிய ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி நதியில் முதலில் பெருக்கெடுத்த வெள்ளம், பின்னா் திரிசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்ததால், நுவாகோட், தாடிங் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. பலத்த உயிா்ச் சேதம் மற்றும் பொருட்சேதத்துடன், நேபாளம் கடந்த பல்லாண்டுகளில் காணாத மிக மோசமான இயற்கைப் பேரிடராக இது மாறியுள்ளது.

வெள்ளத்தால் புரட்டிபோடப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பிற முகமையினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சகதி குவியலிலிருந்து சடலங்களை தேடி, அவர்கள் அணிந்திருந்த கம்மல், செயில் உள்ளிட்ட நகைகளை ஒரு கும்பல் திருடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நேபாள காவல்துறையினர் விடியோவில் இருந்த திருடர்கள் உமேஷ், மதன் ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 500 சடலங்களை மீட்புப் படையினர் மீட்டுள்ள நிலையில், காணாமல் போன ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த துயரத்துக்கு மத்தியில் சடலங்களில் இருந்து நகைகளைத் திருடும் சம்பவம் காண்போரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Summary

Nepal Floods - Gang Steals Jewelry While Searching for Buried Bodies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.