பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் (கோப்புப் படம்)
பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் (கோப்புப் படம்)AP

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மீண்டும் தாக்குதல்! தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு!

பாகிஸ்தானின் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடைபெற்றது குறித்து...
Published on

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் மற்ற மாகாணங்களுடன் பலூசிஸ்தானை இணைக்கும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் தண்டவாளத்தின் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் கடந்த ஜன. 19 அன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தெரா முராத் ஜமாலி பகுதியில் அமைந்துள்ள தண்டவாளத்தின் மீது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, தாக்குதல் நடைபெற்ற பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். பின்னர், சேதமடைந்த தண்டவாளப் பகுதிகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுக்கள் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே, தண்டவாளத்தின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு அந்த ரயிலானது பலமுறை கவிழ்க்கப்பட்டது. மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டு 300-க்கும் அதிகமான பயணிகளுடன் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பயங்கரவாதிகள் சிறைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் (கோப்புப் படம்)
ஜெரூசலேமில் ஐநா தலைமையகத்தை புல்டோசரால் இடிக்கும் இஸ்ரேல்!
Summary

bomb attack was carried out on the railway tracks targeting the Jaffar Express train in the Balochistan province of Pakistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com