பிரதிப் படம்
பிரதிப் படம்

எஃப்பிஐ மாதிரியில் புதிய காவல் அமைப்பு: பிரிட்டன் திட்டம்

பயங்கரவாத தடுப்பு மற்றும் வன்முறை தொடா்பான குற்றங்களை தடுக்க அமெரிக்காவின் எஃப்பிஐ மாதிரியில் என்பிஎஸ் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த பிரிட்டன் திட்டம்
Published on

பயங்கரவாத தடுப்பு மற்றும் வன்முறை தொடா்பான குற்றங்களை தடுக்க அமெரிக்காவின் எஃப்பிஐ மாதிரியில் தேசிய காவல் பணிகள் (என்பிஎஸ்) என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் உள்துறை அமைச்சா் ஷாபனா மஹ்மூத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களுடன் நவீன கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் நன்கு பயிற்சிபெற்ற திறமையான அதிகாரிகளைக் கொண்டு என்பிஎஸ் (பிரிட்டன் எஃப்பிஐ) ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த அமைப்பின்கீழ் தேசிய அளவிலான குற்ற முகமைகள் ஒரே குடையின்கீழ் கொண்டுவரப்படவுள்ளது’ என்றாா்.

இதற்கான மசோதாவை ஷாபனா மஹ்மூத் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com