

உரத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் கனடாவும் உறுதிபூண்டுள்ளன. தில்லியில் இன்று(ஜன. 29) உரம் மற்றும் ரசாயனத் துறைக்கான மத்திய அமைச்சர் ஜெ. பி. நட்டாவை கனடாவின் இயற்கை வளத் துறைக்கான அமைச்சர் டிம் ஹோட்ஸ்சன் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது இருதரப்பும், இரு நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உரத் துறையில் பரஸ்பர பயனளிக்கும் முதலீடுகள் குறித்து ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இரு தரப்பும், உணவு மற்றும் வேளாண்மை பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்தியாவும் கனடாவும் உறுதிபூண்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.