சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி!

பாகிஸ்தான் கடலோரக் காவல் படையின் முகாமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 30 வீரர்கள் கொல்லப்பட்டனர்...

Baloch group attacks Pakistan

பாகிஸ்தான் கடலோரக் காவல் படையின் முகாமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 30 வீரர்கள் கொல்லப்பட்டனர்... - கோப்புப் படம்

Published On :

பாகிஸ்தான் கடலோரக் காவல் படையின் முகாமில் நடத்தப்பட்ட தற்கொலைப் படையின் வெடிகுண்டு தாக்குதலில் 30 வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலூசிஸ்தானின் குவாடர் மாவட்டத்தில் அமைந்திருந்த பாகிஸ்தான் கடலோரக் காவல் படையின் முகாமினுள் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) மாலை வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை தற்கொலைப் படையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓட்டி வந்து வெடிக்கச் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், உயிர்பிழைத்த வீரர்களின் மீது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தச் சம்பவத்தில், இதுவரை 30-க்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலுக்கு பலூசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த பலூசிஸ்தான் விடுதலைப் படை எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், அந்த அமைப்பு இந்தத் தாக்குதல் பதிவான 43 நொடி விடியோவையும் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பலூசிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பலூசிஸ்தான் சுதந்திரம் பெறும் வரையில் பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான தங்களின் தாக்குதல்கள் தொடரும் என பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Summary

It has been reported that 30 soldiers were killed in a suicide bombing attack on a Pakistan Coast Guard camp.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.