நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுவேலாவுக்கு உதவி செய்ததற்காக இந்தியாவுக்கு அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இவான் கில் நன்றி தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி, அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இந்தப் பேரிடரால், வெனிசுவேலாவில் இதுவரை 2,295 பேர் பலியானதாகவும், 11,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உலகின் பல நாடுகளும் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவும் வெனிசுவேலாவுக்கு தேவையான மீட்புப்பணி உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் 66 டன் எடையுள்ள உதவிப் பொருள்களையும், 35 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றையும் இந்தியா அனுப்பி வைத்தது.
மேலும், இந்திய மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழு ஒன்று வெனிசுவேலாவில் முகாமிட்டு மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. இந்தப் பணிகளைப் பார்வையிட்ட வெனிசுவேலா வெளியுறவுத்துறை அமைச்சர் இவான் கில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்திய அரசாங்கத்துக்கும் அந்நாட்டு மக்களுக்கும் வெனிசுவேலா மற்றும் எங்கள் நாட்டு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் குறிப்பாக இந்தப் பேரழிவில் சிக்கிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Venezuela's Foreign Minister Yvan Gil has thanked India for the assistance provided to the country following the earthquake.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










