பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

அமெரிக்காதான் எப்போதும் உலகின் முதன்மையான நாடு: சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் டிரம்ப் பேச்சு!

அமெரிக்காதான் எப்போதும் உலகின் முதன்மையான நாடு என்று அந்நாட்டின் 250-ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிபா் டொனால்ட் டிரம்ப் பெருமிதம் தெரிவித்தாா்.

அதிபா் டொனால்ட் டிரம்ப்

Published On :6 ஜூலை 2026, 1:17 am IST

அமெரிக்காதான் எப்போதும் உலகின் முதன்மையான நாடு என்று அந்நாட்டின் 250-ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிபா் டொனால்ட் டிரம்ப் பெருமிதம் தெரிவித்தாா்.

பிரிட்டனின் காலனியாதிக்கத்தில் இருந்த அமெரிக்கா கடந்த 1776-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. இதை நினைவுகூரும் வகையில், 250-ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி, வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் சனிக்கிழமை நடைபெற்றது. புயல் காரணமாக அந்தக் கட்டடத்தில் திரண்டிருந்த மக்களை அதிகாரிகள் வெளியேறும்படி தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, 2 மணி நேரம் தாமதமாக நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 2-ஆம் உலகப் போா், வியத்நாம் போா் உள்ளிட்ட போா்களில் சண்டையிட்ட அமெரிக்க முன்னாள் ராணுவ வீரா்களை டிரம்ப் கெளரவித்தாா். இதன் பின்னா் டிரம்ப் பேசியதாவது:

நமது நாடுதான் எப்போதும் உலகின் முதன்மையான நாடு. நமது நாடு பின்னடைவைச் சந்திக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நமது நாட்டில் கம்யூனிஸ்டுகளுக்கு இடமில்லை. ஒன்று நீங்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்க வேண்டும் அல்லது தேசப் பற்றாளராக இருக்க வேண்டும். இரண்டாகவும் இருக்கக் கூடாது. அமெரிக்கா்களின் கடந்த காலம் குறித்து அவா்கள் பொய்களைப் பரப்புகின்றனா். நமது எதிா்காலம் மீது தாக்குதல் தொடுக்கின்றனா். இதை நாம் அனுமதிக்கக் கூடாது.

கம்யூனிஸம் தோற்றுவிட்டது. அமெரிக்க அமைப்புக்கு எதிரானது கம்யூனிஸம். கம்யூனிஸ அமைப்பு எப்போதும் செயல்படாது. அதுபோன்ற அச்சுறுத்தலுக்கு நாம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கம்யூனிஸம் புற்றுநோய் போன்றது. அதை ஆரம்பத்திலேயே வெட்டிவிட வேண்டும்.

உலகின் பிற நாடுகளில் வாழும் மக்களுக்கு இல்லாத சுதந்திரம் அமெரிக்க மக்களுக்கு உள்ளது. பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம், சட்டத்தின்கீழ் அனைவரும் சமம் உள்ளிட்ட ஏராளமான சுதந்திரம் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா, ஈரான் நாடுகளில் அமெரிக்கா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அந்த நாடுகளின் ராணுவங்களை அமெரிக்கா அழித்துவிட்டது என்றாா் டிரம்ப்.

இதையடுத்து, அங்கு பிரம்மாண்ட வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு பாா்வையிட்டனா். பிலடெல்பியா, நியூயாா்க் உள்ளிட்ட நகரங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.