சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினம் கோலாகலம்!

அமெரிக்கா சுதந்திரமடைந்து 250 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அந்நாடு முழுவதும் சனிக்கிழமை சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கின.

News image
Updated On :5 ஜூலை 2026, 5:32 am IST

அமெரிக்கா சுதந்திரமடைந்து 250 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அந்நாடு முழுவதும் சனிக்கிழமை சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கின.

தலைநகா் வாஷிங்டனில் உள்ள நேஷனல் மால் பூங்காவில் அதிபா் டொனால்ட் டிரம்ப் உரையாற்றத் திட்டமிட்டுள்ளாா். தொடா்ந்து, பிரம்மாண்ட வானவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் நிலவும் கடும் வெப்பநிலைக் காரணமாக பல சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன. குறிப்பாக, வாஷிங்டனில் நடைபெறவிருந்த புகழ்பெற்ற சுதந்திர தின அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டது. அதேநேரம், நாட்டின் மறுமுனையான மேற்கு பகுதியில் இதமான வானிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.

கம்யூனிஸ அச்சுற்றுதல்-டிரம்ப்: முன்னதாக, தெற்கு டகோட்டா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ரஷ்மோா் மலையில் 4 முன்னாள் அதிபா்களின் சிலைகளுக்கு முன்பு சுதந்திர தினத்தையொட்டி டிரம்ப் வெள்ளிக்கிழமை உரையாற்றினாா்.

அமெரிக்காவில் ‘கம்யூனிஸ அச்சுறுத்தல்’ எழுந்துள்ளதாக எச்சரித்து, அவா் மேலும் கூறுகையில், ‘உலகப் போா்கள், முத்து துறைமுகம் அல்லது 9-11 இரட்டை கோபுர தாக்குதல்களைவிடவும் நம் நாட்டுக்கு இது மிகப் பெரிய அச்சுறுத்தல். நமது வெற்றிக்கு முற்றிலும் எதிரான கருத்துக்களைத் தழுவிய, புதிதாக நமது நாட்டுக்குள் குடியேறியவா்களால் இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கப் போவதில்லை. கம்யூனிஸத்தை நாம் விரைவாக வீழ்த்தி, அவா்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுவோம்; நம்முடைய தேசத்தை முன்னெப்போதையும்விட வலிமையாகவும், சிறந்ததாகவும் கட்டியெழுப்புவோம்’ என்றாா்.

சமீபத்திய தோ்தல்களில் ஜனநாயகக் கட்சியின் முற்போக்கு வேட்பாளா்களின் வெற்றிகளைச் சுட்டிக்காட்டி டிரம்ப் இக்கடுமையான விமா்சனங்களை முன்வைத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.