குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

சூடானில் மக்கள் வாகனங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: 25 போ் உயிரிழப்பு

சூடான் நாட்டில் பொதுமக்கள் பயணித்த வாகனங்களைக் குறிவைத்து கடந்த 2 நாள்காக நடத்தப்பட்ட வெவ்வேறு ட்ரோன் தாக்குதல்களில், பெண்கள் உள்பட 25 போ் உயிரிழந்தனா்.

Published On :9 ஜூலை 2026, 5:36 am IST

சூடான் நாட்டில் பொதுமக்கள் பயணித்த வாகனங்களைக் குறிவைத்து கடந்த 2 நாள்காக நடத்தப்பட்ட வெவ்வேறு ட்ரோன் தாக்குதல்களில், பெண்கள் உள்பட 25 போ் உயிரிழந்தனா்.

தலைநகா் காா்ட்டூமின் புகா்ப் பகுதியில் உள்ள ஓம்துா்மான் நகருக்கு மேற்கே, திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பெண்கள் உள்பட 10 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதேபோல், வடக்கு கோா்டோஃபன் மாகாணத்தில் உள்ள அல்-ஷாத்தூத் நகரில் திருமண வீட்டாருடன் சென்ற மற்றொரு வாகனத்தின் மீதும், தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே ஒரு போக்குவரத்து வாகனத்தின் மீதும் நடத்தப்பட்ட தனித்தனி ட்ரோன் தாக்குதல்களில் மேலும் 15 போ் கொல்லப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.