FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கலிபோர்னியாவில் மலர்ந்த அழுகிய பிணவாடை வீசும் மலர்கள்! சுற்றுப்பகுதி முழுக்க..

கலிபோர்னியாவில் அழுகிய பிணவாடை வீசும் மலர்களைக் காண குவியும் மக்கள்

News image
Updated On :14 ஜூலை 2026, 5:27 pm IST

கலிபோர்னியாவின் ஹன்டிங்டான் தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிணவாடை வீசும் மலர்கள் இரண்டு பூத்துள்ளன.

டைட்டன் ஆரம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த இரு மலர்களுக்கும் ஒடோரா - ஒடோரைஸியஸ் என்று செல்லப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த மலர்கள் மலர பத்து ஆண்டுகள் வரையில் ஆகுமாம். ஆனால், மலர் மலர்ந்து புதிதாக இருப்பது என்னவோ வெறும் 24 மணி நேரம்தானாம். இது அச்சுறுத்தல் கொடுக்காத பூ இனம் என்றம், இதுபோன்ற வெறும் ஆயிரம் மலர்கள் மட்டுமே உலகம் முழுவதும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் இரண்டு மலர்கள் ஒன்றாக மலர்ந்திருப்பதால் வாசனையையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் வரிசையில் நின்று மலரைப் பார்த்து ரசித்தனராம்.

பூமொட்டு

பூமொட்டு

இதன் ஆயுள் காலம் சில மணி நேரங்கள் என்பதால், இதனைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் தாவரவியல் பூங்காவுக்கு வந்து மலரைக் கண்டும், வாசனையை நுகர்ந்தும் செல்கிறார்கள்.

கலிபோர்னியா தாவரவியல் பூங்காவில் இதுவரை நடைபெறாத ஒரு அதிசயம் நடந்துள்ளது. இங்கு வளர்க்கப்பட்டு வரும் பிணவாடை வீசும் மலர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக இரண்டு மலர்கள் மலர்ந்துள்ளன. ஒன்று பூத்தாலே அப்பகுதியே நாறும். இரண்டும் ஒன்றாகப் பூத்திருப்பதால் சுற்றுவட்டாரம் முழுக்க துர்நாற்றம் வீசுகிறது.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பலரும் அதனைக் காண சென்று வருகிறார்கள். மலர்கள் என்றாலே வாசனைக்கு சாட்சியாக இருக்கும் நிலையில், இந்த பூக்கள் அழுகிய பிணவாடையை வீசுவது மிகவும் அரிதாகப் பார்க்கப்படுகிறது.

Summary

corpses flower have bloomed in California

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.