சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரு மலர்கள் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடிகை ஹிமா பிந்து மற்றும் ஜீவிதா ஆகியோர் இணைந்து இரு மலர்கள் என்ற தொடரில் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தத் தொடரின் நாயகனாக நடிகர் சந்தோஷ் நடிக்கிறார்.
நண்பர்களான ஹிமா பிந்து, ஜீவிதா மற்றும் நாயகனான சந்தோஷ் இவர்களுக்கிடையே நடக்கும் நிகழ்வுகளை பிரதானப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
இரு மலர்கள் தொடர் கடந்த ஜன. 19 ஆம் தேதி தொடங்கப்பட்டு திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தத் தொடருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவையடுத்து, இரவு 11 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நான் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் தொடர்களில், இரு மலர்கள் தொடர் மக்கள் மனங்களைக் கவர்ந்து முன்னணி தொடராக இருந்து வருகிறது.
இந்த நிலையில், வரும் ஜூலை 20 ஆம் தேதி முதல் இரு மலர்கள் தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடுகளம் தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், பிற்பகல் 2 மணிக்கு புதிய தொடரான சிறகுகள் சீரியலும், பிற்பகல் 2.30 மணிக்கு லட்சுமி தொடரும் ஒளிபரப்பாகவுள்ளது.
Summary
The broadcast time of the serial 'Iru Malargal' on Sun TV has been changed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லட்சுமி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம்!

ஆல்யா மானசாவின் பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ப்ரீத்தி ஷர்மாவின் சாமந்தி தொடரின் ஒளிபரப்பு தேதி!

அன்னம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK




