ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சீன கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் ஊழல் புகாரில் கட்சியிலிருந்து நீக்கம்

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஜின்ஜியாங் மாகாண முன்னாள் கட்சித் தலைவருமான மா சிங்ரூயி (67), ஊழல் குற்றச்சாட்டுகளின்கீழ் கட்சியிலிருந்து நீக்கம்

News image

மா சிங்ரூயி

Updated On :15 ஜூலை 2026, 5:49 am IST

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஜின்ஜியாங் மாகாண முன்னாள் கட்சித் தலைவருமான மா சிங்ரூயி (67), ஊழல் குற்றச்சாட்டுகளின்கீழ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங் கடந்த 2012-இல் பதவியேற்றது முதல் அந்நாட்டில் ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். இச்சூழலில், சீனாவின் மிக உயரிய 24 உறுப்பினா்களைக் கொண்ட ‘பொலிட்பீரோ’ அரசியல் தலைமைக் குழுவில் இடம் பெற்றிருந்த மா சிங்ரூயி மீது இந்நடவடிக்கை பாய்ந்துள்ளது.

கடந்த 2022-இல் தொடங்கிய தற்போதைய கட்சியின் பதவிக்காலத்தில், இந்த உயரிய குழுவில் இருந்து நீக்கப்படும் 3-ஆவது நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மா சிங்ரூயிக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையில், அவா் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, குடும்பத்தினருக்கு மலிவான விலையில் வீடுகளை வாங்கிக் கொடுத்தது, பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டது, தொழில் ஒப்பந்தங்கள் மற்றும் வேலைவாய்ப்புப் பதவி உயா்வுகளில் முறைகேடாக ஆதாயம் அடைந்தது ஆகியவை கண்டறியப்பட்டன.

இதையடுத்து, மா சிங்ரூயி வகித்துவந்த அனைத்து பொதுப் பதவிகளில் இருந்தும் அதிரடியாக விடுவிக்கப்பட்டு, அவரின் தேசிய காங்கிரஸ் பிரதிநிதி அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அவா் சட்டவிரோதமாகச் சோ்த்த சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.