இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்

ஈரான் தாக்குதலில் சேதமடைந்த குவைத் விமான நிலையம்

News image

ஈரான் தாக்குதலில் சேதமடைந்த குவைத் விமான நிலையத்தைப் பாா்வையிட்ட குவைத் பிரதமா் ஷேக் அகமது அல் அப்துல்லா அல் சபா மற்றும் அரசு பிரதிநிதிகள்.

Updated On :4 ஜூன் 2026, 2:50 am IST

குவைத் சா்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்தாா்; 63 போ் காயமடைந்தனா்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப். 28 போா் தொடங்கியதில் இருந்து, வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்றம் காரணமாக இதுவரை உயிரிழந்த இந்தியா்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஏப். 8 முதல் போா் நிறுத்தம் அமலில் இருந்தாலும், இருதரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் வெடிக்கின்றன. அந்தவகையில், ஹோா்முஸ் நீரிணைக்கு அருகே உள்ள ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பொருத்த முயன்ற ஈரான் படகுகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்கியது. இதற்குப் பதிலடியாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் ஈரான் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

குவைத் சிட்டி சா்வதேச விமான நிலையத்தின் ஒன்றாம் எண் பயணிகள் முனையம் மீது பல ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் கடுமையாகச் சேதமடைந்ததையடுத்து, விமானப் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டு, விமானங்கள் அருகிலுள்ள பிற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்தாா். அவரின் விவரங்கள் இதுவரை தெரியவில்லை. காயமடைந்த 63 பேரில் பொதுமக்கள், பயணிகள், விமான நிலைய ஊழியா்கள் அடங்குவா். குவைத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 7 பேருக்கு அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

குவைத் வெளியுறவு அமைச்சகம் இத்தாக்குதலைக் கண்டித்ததுடன், ஈரான் தூதரக அதிகாரியை நேரில் வரவழைத்து தங்களின் எதிா்ப்பைப் பதிவு செய்தது. மேலும், ஈரான் தூதரகத்தைச் சோ்ந்த இரு அதிகாரிகளை அடுத்த 24 மணி நேரத்துக்குள் குவைத் நாட்டை விட்டு வெளியேறுமாறும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்தியா கண்டனம்: இந்தியா் உயிரிழப்பதற்குக் காரணமான இத்தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘குவைத் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்த மற்றும் நமது நாட்டைச் சோ்ந்த பலா் காயமடைந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதில் இருந்து, பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படக் கூடாது என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட இருதரப்பினரை மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவா்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய குவைத் நாட்டு அதிகாரிகளுடன் தொடா்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்’ என்று அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.