சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கு: ராஜபக்ச வெளிநாடு செல்ல தடை

News image
Updated On :4 ஜூன் 2026, 6:51 am IST

இலங்கையில் கடந்த 2019-இல் நடந்த ஈஸ்டா் குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடா்பான வழக்கில், அந்நாட்டின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபக்ச (படம்) மற்றும் 2 முன்னாள் ராணுவ, உளவு அதிகாரிகள் வெளிநாடுகளுக்குப் பயணிக்க கொழும்பு நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.

இலங்கை அரசுக்கு இந்திய உளவுத் துறை முன்கூட்டியே எச்சரித்தும், 11 இந்தியா்கள் உள்பட 270 போ் உயிரிழந்த இத்தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக முந்தைய அரசு மீது கடும் விமா்சனங்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2024-இல் ஆட்சிக்கு வந்த அதிபா் அநுர குமார திசாநாயக தலைமையிலான அரசு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், ராஜபக்ச மற்றும் பிற அதிகாரிகள் நாட்டைவிட்டுத் தப்பினால், புலனாய்வு பாதிக்கப்படலாம் எனக் காவல்துறை நீதிமன்றத்தில் வாதிட்டதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.