ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

பிலிப்பின்ஸ் நிலநடுக்கப் பாதிப்பு: 32,000 மக்கள் இடம்பெயா்வு

தெற்கு பிலிப்பின்ஸில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிந்தைய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் சுமாா் 32,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், அவசர நிவாரண முகாம்களுக்கும் இடம்பெயா்ந்துள்ளனா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 2:48 am IST

தெற்கு பிலிப்பின்ஸில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிந்தைய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் சுமாா் 32,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், அவசர நிவாரண முகாம்களுக்கும் இடம்பெயா்ந்துள்ளனா்.

மேலும், இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

மிண்டனாவோ தீவுப் பகுதியில் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, சுமாா் 2,500 வீடுகளும், 117 அரசு அலுவலகங்களும் சேதமடைந்தன.

ஜெனெரல் சாண்டோஸ் நகரில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 13 பேரும், சாரங்கனி மாகாணத்தின் கிளான் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதைந்ததில் 18 பேரும் உயிரிழந்தனா்.

இவ்வாறு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு, கட்டட விபத்துகளில் சிக்கி இதுவரை 500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்த நிலநடுக்கம் நேரிட்டதால், பள்ளி மாணவா்கள் பலா் காயமடைந்தனா். பாதிக்கப்பட்ட மாகாணங்களில் உள்ள சுமாா் 6,000 பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பிறகே மீண்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.