துபை : ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான சண்டையை முடிவுக்கு கொண்டுவர நடைபெறும் சமரசப் பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் ஈரான் இப்போது அதற்கான விலை கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் மீதான தங்கள் நாட்டுப் படைகளின் அடுத்தகட்ட தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.
ஈரானைக் குறிவைத்து புதன்கிழமை (ஜூன் 10) அதிகாலை அமெரிக்க படைகள் வான் வழி தாக்குதல்களில் ஈடுபட்டன. அமெரிக்க ராணுவ வானூர்தியொன்றை ஈரானிய படைகள் தாக்கியதாக குற்றஞ்சாட்டி அமெரிக்கா அதற்கான பதிலடியாக மேற்குறிப்பிடப்பட்ட தாக்குதல்களை நிக்ழ்த்தியுள்ளது.
இதனிடையே, மத்திய கிழக்கில் உள்ள நாடுகளைக் குறிவைத்து ஈரானின் தாக்குதல்களால் மேற்காசியப் போரின் தாக்கம் விரிவடைந்துள்ளது. பஹ்ரைன், குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் : “ஒரு ஒப்பந்தம் உடன்படிக்கையாக ஈரான் நெடுங்கால அவகாசம் எடுத்துக் கொள்கிறது. இப்போது, அவர்கள் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்” என்றார்.
டிரம்ப்பைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவொன்றில், ‘ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வசமாக்க முடியாது’ என்று குறிப்பிட்டு அந்நாட்டின் மீதான தங்கள் நாட்டுப் படைகளின் தாக்குதல்களுக்கு விளக்கமளித்திருக்கிறார்.
தற்காலிக போர்நிறுத்தத்தை மீறி கடந்த திங்கள்கிழமை (ஜூன் 8) இஸ்ரேலும் ஈரானும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன. இதனிடையே, இந்த ஒரே வாரத்தில், இரண்டாவது முறையாக மீண்டும் புதன்கிழமை தாக்குதல்களுக்கு இடமளிக்கப்பட்டிருப்பதென்பது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல் முற்றுப்பெற்று அமைதி நிலவுமா என்பதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
Summary
The United States launched airstrikes early Wednesday against Iran after blaming Tehran for the crash of an American attack helicopter, and Iran fired back at countries in the region - another escalation that threatened to derail efforts to end the war.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!
அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றம்!

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்த டிரம்ப்

ஈரான் ஒப்பந்தத்துக்கு இணங்காவிட்டால் எதுவும் மிஞ்சாது! - டிரம்ப் மிரட்டல்!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!




