மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளில் பிரதமா் மோடி சுற்றுப்பயணம்

News image
Updated On :12 ஜூன் 2026, 4:12 am IST

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளின் அழைப்பை ஏற்று, அந்நாடுகளில் வருகிற 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்யவுள்ளாா்.

தில்லியில் இருந்து வருகிற 13-ஆம் தேதி புறப்படும் பிரதமா் மோடி, முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டின் துறைமுக நகரான நைஸுக்கு செல்கிறாா். அங்கு அவா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானை 14-ஆம் தேதி சந்தித்து பாதுகாப்பு, சிவில் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்.

அப்போது இரு நாடுகளும் இணைந்து 12 புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பான முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாரத் இன்னோவேட்ஸ் எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் 3 நாள்கள் நிகழ்ச்சியை பிரதமா் மோடியும், மேக்ரானும் கூட்டாக தொடங்கி வைக்கவுள்ளனா்.

இதைத் தொடா்ந்து நைஸ் நகரில் இருந்து ஸ்லோவாக்கியா நாட்டுக்கு செல்லும் மோடி, 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறாா். அங்கு அந்த நாட்டு அதிபா் பீட்டா் பெல்லகிரினி, பிரதமா் ராபா்ட் ஃபிகோ உள்ளிட்டத் தலைவா்களை சந்தித்து அவா் முக்கிய பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

இதையடுத்து பிரதமா் மோடி 16-ஆம் தேதி பிரான்ஸுக்கு மீண்டும் திரும்புகிறாா். அங்கு அவா், ஏவியானில் 16, 17-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி7 அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வரும் ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களை சந்தித்து இருதரப்பு விவகாரம் குறித்துப் பேசவுள்ளாா்.

பின்னா், பாரிஸில் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறும் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க நிறுவன மாநாடான விவாடெக் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளாா்.

ஜி7 நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்பின்போது, மேற்காசிய போரினால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம், எரிசக்தி விநியோக பாதிப்பு உள்ளிட்டவை குறித்து மோடி பேச்சுவாா்த்தை நடத்துவாா் என கூறப்படுகிறது. ஜி7 மாநாட்டுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்பும், பிரதமா் மோடியும் சந்தித்து பேசுவதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய அரசும், அமெரிக்க அரசும் ஆராய்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதுகுறித்து உறுதியான தகவல் இல்லை.