மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தாய்லாந்து இளவரசி பஜ்ரகிட்டியபா 47 வயதில் காலமானார்!

தாய்லாந்து நாட்டின் இளவரசி பஜ்ரகிட்டியபா உயிரிழந்தது குறித்து...

News image

தாய்லாந்து இளவரசி பஜ்ரகிட்டியபா மரணம்... - AP

Updated On :12 ஜூன் 2026, 6:06 pm IST

தாய்லாந்து இளவரசி பஜ்ரகிட்டியபா உடல் நலக் குறைவால் காலமானார்.

தாய்லாந்து நாட்டின் மன்னர் வஜிரலோங்கோர்னின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகிட்டியபா (வயது 47) வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சுயநினைவின்றி சிகிச்சையில் இருந்த இளவரசி பஜ்ரகிட்டியபா கடந்த வியாழக்கிழமை (ஜூன் 11) மாலை உயிரிழந்ததாக, தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுல் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இளவரசி பஜ்ரகிட்டியபாவின் மறைவுச் செய்தி வெளியானதும் பாங்காக் மருத்துவமனை அருகே கையில் அவரது புகைப்படங்களை ஏந்தி நூற்றுக்கணக்கான தாய்லாந்து மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக, தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்விற்காக “இன்ஸ்பயர்” எனும் திட்டத்தை இளவரசி பஜ்ரகிட்டியபா செயல்படுத்தியதன் மூலம் அந்நாட்டு மக்களிடையே பிரபலமாக அறியப்படுகிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில், ராணுவக் கண்காட்சிக்காக வளர்ப்பு நாய்களுக்குப் பயிற்சி அளிக்கையில் திடீரென மயக்கமடைந்த பஜ்ரகிட்டியபா, நிமோனியா காய்ச்சலுடன் தொடர்புடைய மைக்கோபிளாஸ்மா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Thai Princess Bajrakitiyabha has passed away due to ill health.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.