டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

சைபர் கிரைம் மோசடியில் தாய்லாந்து தப்பியோடியவர் கைது

சைபர் கிரைம் மோசடியில் தேடப்பட்டு வந்த கணேஷ் பாலசோ காலேவை இந்தியாவுக்கான தாய்லாந்து தூதரகத்தின் உதவியுடன் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

Ganesh Balaso Kale

கணேஷ் பாலசோ காலே - ANI

Published On :

சைபர் கிரைம் மோசடியில் தேடப்பட்டு வந்த கணேஷ் பாலசோ காலேவை இந்தியாவுக்கான தாய்லாந்து தூதரகத்தின் உதவியுடன் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இணைய வழியாக பகுதிநேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்த புகாரில் கணேஷ் பாலசோ காலே தேடப்பட்டு வந்தார். ஆனால், அவர் தாய்லாந்துக்கு தப்பியோடியதாகக் கூறப்படும் நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், கணேஷ் பாலசோவை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்தநிலையில், அவரை நாடு கடத்துமாறு தாய்லாந்து அரசுக்கு இந்திய வெளியுறவு உள்துறை அமைச்சகம் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் கோரியது.

இதனையடுத்து, கணேஷ் பாலசோ நாடுகடத்தப்பட்டு, மும்பை விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அவரை மகாராஷ்டிர சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

Summary

CBI, in coordination with the MEA, MHA, and the Indian Embassy in Thailand, secured Ganesh Balaso Kale’s deportation to India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.