மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

பாலியல் வழக்கில் நார்வே பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை!

பாலியல் வழக்கில் தொடர்புடைய நார்வே பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது பற்றி...

Marius Borg Høiby

நார்வே பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை. - கோப்புப் படம்

Published On :

பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நார்வே பட்டத்து இளவரசி மெட்டே மாரிட்-ன் மகன் மரியஸ் போர்க் ஹோய்பிக்கு நான்கு ஆண்டுகள சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

ஓஸ்லோ மாவட்ட நீதிமன்றம், மரியஸ் போர்க் ஹோய்பிக்கு திங்கள்கிழமை (ஜூன் 15) காலை இந்தத் தண்டனையை விதித்தது.

ஹோய்பி (29) மீது, நான்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள், தாக்குதல் குற்றங்கள், பலமுறை தடை உத்தரவுகளை மீறியது, அத்துடன் போதைப்பொருள் மற்றும் வாகனம் ஓட்டுதல் தொடர்பான குற்றங்கள் உள்பட 40 குற்றங்கள் சுமத்தப்பட்டன.

அதிலும் குறிப்பாக 2018 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நான்கு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஒவ்வொரு வழக்கிலும், அந்தப் பெண்கள் உறங்கிக் கொண்டிருந்ததாகவோ அல்லது சுயநினைவற்ற நிலையில் இருந்ததாகவோ குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, குற்றவாளியான ஹோய்பிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியதோடு, பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

மேலும், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும், மரியஸ் போர்க் ஹோய்பிக்கும் கடந்த கால நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Marius Borg Høiby, the son of Norway's Crown Princess Mette-Marit, was sentenced to four years in prison after being convicted in a sexual assault case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.