74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது பற்றி...

News image

அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். - X

Updated On :18 ஜூன் 2026, 9:01 am IST

அமெரிக்கா - ஈரான் இடையே போரை நிறுத்திக் கொள்வதற்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான போா் நிறுத்தத்தின் வரைவு ஒப்பந்தம் கடந்த வாரம் இறுதி செய்யப்பட்டது.

இவ்விவகாரத்தில் மத்தியஸ்தரான பாகிஸ்தான் முன்னிலையில் ஸ்விட்சா்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் முறைப்படி கையொப்பமிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு அதிபர் மேக்ரான் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில், ஒரு நாள் முன்னதாகவே அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து, அமெரிக்கா - ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை வாபஸ், நிபந்தனையின்றி ஹோர்முஸ் நீரிணை திறப்பு, லெபனானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை நிறுத்தம், ஈரான் மறுகட்டமைப்புக்கு அமெரிக்காவின் நிதி உள்பட 14 முக்கிய அம்சங்கள் ஒப்பந்தத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

US-Iran peace agreement signed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.