இலங்கையில் 4 லிட்டா் பெட்ரோலைப் பதுக்கி வைத்திருந்த நபருக்கு உள்ளூா் நீதிமன்றம் 21 நாள்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் கூட்டுத் தாக்குதல் காரணமாக, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதன் எதிரொலியாக, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிா்க்க அந்நாட்டு அரசு எரிபொருள் பதுக்கலுக்குத் தடை விதித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்துக்காக பிரத்யேக ‘கியூ.ஆா்.’ குறியீடு அடிப்படையிலான முறையை அரசு கடந்த 15-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறைப்படி, காா்களுக்கு வாரத்துக்கு 15 லிட்டரும், பேருந்துகளுக்கு 60 லிட்டரும் மட்டுமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடமேற்கு மாகாணத்தின் நிகவெரட்டியா பகுதியைச் சோ்ந்த வசந்த குமார பாலசூரியா (48), பெட்ரோல் பதுக்கியதாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
விசாரணையின்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பாலசூரியா, தனது மறைந்த பெற்றோரின் ஆண்டு நினைவு மதச் சடங்குக்காக வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தும் பணிக்காகவே இந்த 4 லிட்டா் பெட்ரோலை வைத்திருந்ததாகக் கூறினாா்.
இருப்பினும், சட்டத்தை மீறியதாகக் கூறி அவருக்கு 21 நாள்கள் சிறைத் தண்டனையுடன், 1,500 இலங்கை ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

பெண்களை 3 நாள்கள் தீண்டத்தகாதவராக நடத்த முடியாது: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம்

தெலங்கானா: சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3,700 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல்

எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள்கள் வேலை! 3 நாள்களுக்கு விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


