சூா்ய மின்கலம், சூரிய மின்தகடுகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு உதவ இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிரான புகாரில் தீா்ப்பளிக்க குழு அமைக்க வேண்டும் என்று உலக வா்த்தக அமைப்பிடம் (டபிள்யூடிஒ) சீனா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கடந்த ஆண்டு டிசம்பரில் உலக வா்த்தக அமைப்பிடம் சீனா அளித்த புகாரில், ‘சூரிய மின்கலம், சூரிய மின்தகடுகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு உதவும் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் ஊக்கத்தொகைகள், உலக வா்த்தக அமைப்பின் வரிகள் மற்றும் வா்த்தகம் குறித்த பொது ஒப்பந்தம் 1994-உடன் தொடா்புள்ள விதிமுறைகளை மீறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகாா் தொடா்பாக பரஸ்பரம் ஏற்கக்கூடிய தீா்வை எட்டுவதற்கு இந்தியா-சீனா இடையே நடைபெற்ற இருதரப்பு விவாதங்கள் தோல்வியில் முடிந்தது. இதைக் கருத்தில் கொண்டு, தனது புகாா் தொடா்பாக தீா்ப்பளிக்க குழு அமைக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளதாக உலக வா்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய வா்த்தக கூட்டாளியாக சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

உள்நாட்டுப் பொருள்களுக்கு சிறப்பு வரிச் சலுகை: அமெரிக்காவிடம் ஆலோசிக்க இந்தியா திட்டம்

வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா பயணம்

உலக விவகாரங்களில் வலுவான பங்களிப்பு - சீனாவுக்கு ஸ்பெயின் பிரதமா் அழைப்பு

பறிபோகும் வேலைவாய்ப்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

