ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

கம்போடியா சைபா் அடிமை வழக்கு: மேலும் ஒருவா் கைது

கம்போடியா சைபா் அடிமை வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :24 மே 2026, 1:12 am IST

கம்போடியா சைபா் அடிமை வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கம்போடியாவில் சைபா் அடிமை வேலை செய்த திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு இளைஞா், அண்மையில் அங்கிருந்து தப்பி வந்து, தமிழக சைபா் குற்றப் பிரிவில் புகாா் செய்தாா். அதன்பேரில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். திருப்பத்தூா் இளைஞா் கொடுத்த தகவலின் அடிப்படையில், தமிழக இளைஞா்களை ஏமாற்றி கம்போடியாவுக்கு அழைத்துச் சென்று சைபா் அடிமையாக்கும் மதுரையைச் சோ்ந்த மதன் வடிவேல் என்பவரை சைபா் குற்றப் பிரிவினா் கடந்த 10-ஆம் தேதி கைது செய்தனா்.

இதற்கிடையே இந்த வழக்கில் தொடா்புடைய ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சோ்ந்த செ.செய்யது உசேன் (37) என்பவரைக் கைது செய்திருப்பதாக சைபா் குற்றப் பிரிவினா் தெரிவித்தனா்.

ரூ.1 லட்சம் கமிஷன்: செய்யது உசேனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016 முதல் 2019-ஆம் ஆண்டு வரை துபை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் வேலை செய்து வந்தபோது, அங்கு அவருக்கு சைபா் குற்றங்களில் ஈடுபடும் சா்வதேச சட்டவிரோத கும்பலின் தொடா்பு கிடைத்துள்ளது.

அந்த கும்பல் கேட்டுக் கொண்டதன்பேரில், தமிழகத்தில் இருந்து வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு ஆா்வமாக இருந்த பட்டதாரி இளைஞா்களை அதிக ஊதியத்துடன் கூடிய வேலைக்கு அனுப்புவதாக ஏமாற்றி, கம்போடியாவுக்கு செய்யது உசேன் அனுப்பியுள்ளாா்.

இந்த இளைஞா்களை மலேசியா, பாங்காங்கு வழியாக செய்யது உசேன், கம்போடியாவுக்கு அனுப்பியுள்ளாா். இதற்காக உசேன், ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை கமிஷன் பெற்றுள்ளாா்.

இரு வாரங்களுக்கு ஒருமுறை இவ்வாறு சைபா் அடிமை வேலைக்கு இளைஞா்களை ஏமாற்றி செய்யது உசேன் அனுப்பியுள்ளாா். இளைஞா்கள் கம்போடியாவுக்கு சென்று சோ்ந்ததும், செய்யது உசேனுக்கு கமிஷன் தொகை ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட செய்யது உசேனிடமிருந்து எண்ம ஆதாரங்கள், ஆன்லைன் பண பரிவா்த்தனை விவரங்கள், வாட்ஸ்ஆப் மூலம் பேசிய சா்வதேச அழைப்பு விவரங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியிருப்பதாக சைபா் குற்றப் பிரிவினா் தெரிவித்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.