25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஹமாஸ் ஆயுதப் படையின் புதிய தலைவரைக் கொன்ற இஸ்ரேல்!

ஹமாஸ் அமைப்பின் புதிய ஆயுதப் படைத் தலைவரைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்தது.

ஹமாஸ் ஆயுதப் படைத் தலைவர் முகமது ஓடே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியிட்ட புகைப்படம் - X

Published On :27 மே 2026, 1:42 pm IST

ஹமாஸ் அமைப்பின் புதிய ஆயுதப் படைத் தலைவரைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்தது.

ஹமாஸ் அமைப்பின் புதிய ஆயுதப்படை தலைவரான முகமது ஓடே, காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் இதுபற்றிப் பேசுகையில், “காஸாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ஆயுதப்படையின் தலைவர் நேற்று கொல்லப்பட்டார். நரகத்தில் உள்ள தனது கூட்டாளிகளைச் சந்திப்பதற்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மற்றும் என்னுடைய சார்பாக இந்த அற்புதமான செயல்பாட்டிற்காக இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

அக்டோபர் 7 தாக்குதலுக்குக் காரணமான அனைவரையும் அழிப்போம் என உறுதியெடுத்தோம். அதனை நாங்கள் செய்து முடிப்போம். அவர்கள் அனைவருக்கும் மரணம் உறுதி” என்று தெரிவித்தார்.

ஹமாஸ் மீது நேற்று தாக்குதல் நடத்தவிருப்பதை அறிவித்த பின்னர் கட்ஸ் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட கூட்டறிக்கையில், "அக்டோபர் 7 தாக்குதலின்போது ஓடே ஹமாஸ் உளவுத்துறையின் தலைவராகப் பணியாற்றினார்.

இஸ்ரேலில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என பலர் பலியானதற்கு அவரே காரணமாக இருந்தார்” எனத் தெரிவித்தனர்.

ஓடே கொல்லப்பட்டது பற்றி ஹமாஸ் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

அக்டோபர் தாக்குதலில் இஸ்ரேலில் 1,221 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது நடத்தியத் தாக்குதலில் இதுவரை 72,803 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Israel Kills New Leader of Hamas Armed Forces

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.