கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

ரஷிய ட்ரோன் இலக்குத் தவறி ருமேனிய குடியிருப்பில் மோதி வெடிப்பு

உக்ரைன் நோக்கி ஏவப்பட்ட ரஷிய ட்ரோன், அண்டை நாடான ருமேனியாவின் கலாட்டி நகரில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் மோதி வெடித்தது. இதில் ஒரு பெண்ணும் குழந்தையும் லேசான காயமடைந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 1:03 am IST

உக்ரைன் நோக்கி ஏவப்பட்ட ரஷிய ட்ரோன், அண்டை நாடான ருமேனியாவின் கலாட்டி நகரில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் மோதி வெடித்தது. இதில் ஒரு பெண்ணும் குழந்தையும் லேசான காயமடைந்தனா்.

‘நேட்டோ’ உறுப்பு நாட்டின், மக்கள்தொகை அதிகம் கொண்ட குடியிருப்புப் பகுதியில் ரஷிய ட்ரோன் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இச்சூழலில், ருமேனிய அதிபா் நிக்குஷா் டானுடன் நேட்டோ பொதுச் செயலா் மாா்க் ருட்டே அவசர ஆலோசனை நடத்தினாா்.

இதையடுத்து, ரஷியாவின் இப்பொறுப்பற்ற செயலைக் கண்டித்த மாா்க் ருட்டே, உறுப்பு நாடுகளின் ஒவ்வொரு அங்குலப் பகுதியையும் பாதுகாக்க நேட்டோ தயாராக இருப்பதாக எச்சரித்தாா்.