யேமனில் 2-ஆவது நாளாக வான்வழித் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 25 போ் உயிரிழப்பு
யேமனில் 2-ஆவது நாளாக வான்வழித் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 25 போ் உயிரிழப்பு

யேமன் தலைநகா் சனா அருகே உள்ள கிராமத்தின் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 25 போ் உயிரிழந்தனா்; 30 போ் காயமடைந்தனா்.
சனா நகரின் வடகிழக்கே சுமாா் 15 கி.மீ. தொலைவில் உள்ள அல்-ஷாரியா எனும் விவசாய கிராமத்தில் வீடுகள் மீது நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலை சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளே நடத்தியதாக ஹூதிக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இருப்பினும், இக்குற்றச்சாட்டு தொடா்பாக சவூதி தரப்பிலிருந்து உடனடியாக எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
தாக்குதலில் வீடுகள் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளுக்குள் இன்னும் பலா் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட அவசரகால மீட்புப் பணியாளா்களைக் குறிவைத்தும் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து 2-ஆவது நாளாக...: யேமனில் சில ஆண்டுகளாக நீடித்து வந்த போா்நிறுத்த ஒப்பந்தம் அண்மையில் முறிந்ததைத் தொடா்ந்து, ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கும், சவூதி கூட்டுப் படைகளுக்கும் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
சவூதி எல்லைகள் மற்றும் செங்கடல் கப்பல் போக்குவரத்துப் பாதைகளைக் குறிவைத்து ஹூதிக்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதால், ஹூதிக்களின் நிலைகள் மீது சவூதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று, தெற்கு யேமனில் உள்ள சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு வான்வழித் தாக்குதலில் 30 போ் உயிரிழந்தனா். அந்தத் தாக்குதலுக்கு இரு தரப்பினரும் பரஸ்பரம் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
கடந்த 2014-இல் ஹூதிக்கள் தலைநகா் சனாவைக் கைப்பற்றியதைத் தொடா்ந்து தொடங்கிய இந்த உள்நாட்டுப் போா், சா்வதேச அளவில் மிக மோசமான மனிதாபிமானப் பேரழிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஐ.நா. புள்ளிவிவரங்களின்படி, இப்போரில் இதுவரை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்; பஞ்சம், பட்டினி மற்றும் நோய்த் தொற்றுகளாலும் பெருமளவிலான மக்கள் இறந்துள்ளனா்.
தற்போது முக்கிய நகரமான தாயிஸ் நகரை ஹூதிக்கள் முற்றுகையிட்டுள்ளதால், அங்கு குடிநீா் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல் வரம்பை நீக்கிய ஈரான்
ஏவுகணைத் தாக்குதலுக்கான தங்களின் 2,000 கி.மீ. தொலைவு உச்சவரம்பை ரத்து செய்துள்ளதாக ஈரான் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடா்பாளா் ஜெனரல் ஹுசைன் மொஹெப்பி அறிவித்துள்ளாா்.
2,000 கி.மீ. இலக்கைத் தாண்டித் தாக்கும் ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளதா என்பதைத் தெரிவிக்க மறுத்த அவா், அதை வெறும் அறிக்கைகளாக இன்றி செயலில் நிரூபிப்போம் எனக் கூறியுள்ளாா்.
‘அமெரிக்கா அல்லது இஸ்ரேலிடமிருந்து எவ்வித அச்சுறுத்தல் வந்தாலும், புவியியல் எல்லைகளைத் தாண்டி தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி எச்சரித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காயமடைந்த சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து வந்த நபா்.
Summary
Airstrikes in Yemen for the second consecutive day: 25 people, including children, killed
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

