190 குழந்தைகளின் பட்டினிச்சாவுக்கு காரணமான மத போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை!

கென்யாவில் 190 குழந்தைகளின் பட்டினிச்சாவுக்கு காரணமான மத போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை...

Leader of Kenyan doomsday cult sentenced to 200 years in prison

கென்யாவில் மத போதகர் பால் மெக்கன்சிக்கு 200 ஆண்டுகள் சிறை... - AP

Updated On :

கென்யாவில், 190 குழந்தைகளின் பட்டிச்சாவுக்குக் காரணமான மத போதகருக்கு 200 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில், குட்நியூஸ் இண்டர்நேஷனல் சர்ச் எனும் பெயரில் இயங்கிய மதக்குழுவொன்று இயேசு கிறிஸ்துவைக் காண வேண்டும் என்றால் குடும்பத்துடன் உணவு சாப்பிடாமல் தீவிரப் பட்டினி விரதம் கடைபிடிக்க வேண்டுமெனக் கூறி கிராம மக்கள் ஏமாற்றியுள்ளது.

அந்தக் குழுவின் தலைவரான மத போதகர் பால் மெக்கன்சி தன்னை ஒரு தீர்க்கதரிசி எனக் கூறியதை நம்பி அவருடன் சென்று பட்டினி விரதம் கடைபிடித்த சுமார் 400 பேர் பலியானதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு கிலிஃபி நகரத்திலுள்ள பால் மெக்கன்சிக்கு சொந்தமான 800 ஏக்கர் பண்ணையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு புதைக்கப்பட்டிருந்த சுமார் 400 பேரது உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 190 குழந்தைகள் உள்பட சுமார் 191 பேரின் மரணத்துக்கு பால் மெக்கன்சி மற்றும் அவரது கூட்டளிகள் 28 பேர் காரணம் எனக் கூறி அவர்களைக் கொலைக் குற்றவாளிகள் என கென்யா நீதிமன்றம் கடந்த அக்.19 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் 191 பேரின் மரணத்துக்குக் காரணமான பால் மெக்கன்சிக்கு, மொம்பாசா நகரத்தின் உயர் நீதிமன்றம் நேற்று (நவ. 6) 200 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக, பால் மெக்கன்சியால் மரணமடைந்த சுமார் 400 பேரில் தற்போது வரை சுமார் 60 பேரின் உடல்கள் மட்டுமே அவர்களின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது குறுப்பிடத்தக்கது.

Summary

In Kenya, a religious preacher responsible for the deaths of 190 children has been sentenced to 200 years in prison.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.