பள்ளிச் சான்றிதழ் சர்ச்சை! இந்தோனேசிய துணை அதிபர் ராஜிநாமா!
இந்தோனேசிய துணை அதிபர் ராஜிநாமா செய்தது பற்றி...

இந்தோனேசிய துணை அதிபர் ஜிப்ரான் ரகபூமிங் ரகா - AP
பள்ளிச் சான்றிதழ் சர்ச்சையில் சிக்கிய இந்தோனேசியாவின் துணை அதிபர் ஜிப்ரான் ரகபூமிங் ரகா தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் ஜோக்கோ விடோடோவின் மூத்த மகனான ஜிப்ரான் ரகபூமிங் ரகா (வயது 39), கடந்த 2024 ஆம் ஆண்டு துணை அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்றார்.
இந்தோனேசிய சட்டப்படி, துணை அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடுபவர் குறைந்தபட்சம் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்திருக்க வேண்டும் என்ற நிலையில், வெளிநாட்டில் படித்த அதற்கு இணையான சான்றிதழ்களை ஜிப்ரான் தனது வேட்புமனுவில் தாக்கல் செய்திருந்தார்.
ஜிப்ரான் தாக்கல் செய்த ஆவணங்கள் விவாதத்துக்குள்ளான நிலையில், அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தன.
வெளிநாட்டில் பல்கலைக்கழக படிப்பை நிறைவு செய்ததே மேல்நிலைப் பள்ளி கல்வியை முடித்ததற்கான சான்று என்று ஜிப்ரான் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், “ஜிப்ரான் பள்ளிக் கல்வியை முடித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, ஜிப்ரானை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வரும் முயற்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கினர்.
அந்நாட்டின் 120-க்கும் மேற்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தின் முன்மொழிவை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருந்தனர்.
இந்த நிலையில், இந்தோனேசிய நாடாளுமன்றத்துக்கு இன்று காலை வருகை தந்த ஜிப்ரான், மக்கள் கலந்தாய்வு பேரவையின் தலைவரிடம் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
இதற்கு முன்னதாக, கடந்த 2021 முதல் 2024 வரை சுரகார்த்தா நகர மேயராக ஜிப்ரான் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
Summary
School certificate controversy! Indonesian Vice President Gibran Rakabuming Raka resigns!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


