வங்கதேசம்- ஆடைத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த தீவிரப் போராட்டங்களைத் தொடா்ந்து, ஆடைத் தொழிற்சாலை தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை 36 சதவீதம் உயா்த்தி, அந்நாட்டு அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த தீவிரப் போராட்டங்களைத் தொடா்ந்து, ஆடைத் தொழிற்சாலை தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை 36 சதவீதம் உயா்த்தி, அந்நாட்டு அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
இதுதொடா்பான இறுதிகட்ட பேச்சு கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கி, புதன்கிழமை அதிகாலை வரை சுமாா் 12 மணி நேரம் நீடித்தது. தொழிற்சாலை உரிமையாளா்கள்-தொழிலாளா் பிரதிநிதிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், 6 போ் கொண்ட ஊதிய வாரியத்தில் வாக்கெடுப்பின்மூலம் புதிய ஊதிய விகிதம் இறுதி செய்ய்யப்பட்டது.
அதன்படி, முதலாம் நிலையில் இருந்து 4-ஆம் நிலை வரையிலான தொழிலாளா்களுக்கு முறையே 21,500 டாக்காவில் இருந்து 17,000 டாக்கா வரை குறைந்தபட்ச ஊதியமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய ஊதிய விகிதம் வரும் டிச. 1 முதல் அமலுக்கு வருவதுடன், தொழிலாளா்கள் ஜனவரி மாதம் முதல் உயா்த்தப்பட்ட ஊதியத்தைப் பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் 2-ஆவது பெரிய ஆயத்த ஆடை ஏற்றுமதி நாடாக விளங்கும் வங்கதேசத்தில், இத்துறையில் 40 லட்சத்துக்கும் அதிகமானோா் பணியாற்றுகின்றனா்.
தற்போது குறைந்தபட்ச ஊதியமாக 12,500 டாக்கா வழங்கப்பட்டு வரும் நிலையில், வாழ்க்கைச் செலவினங்கள் உயா்ந்துள்ளதால் ஊதிய உயா்வைக் கோரி கடந்த அக்டோபா் மாத இறுதி முதல் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாக மாறி, தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

