இந்தோனேசிய வெள்ளத்தில் மூழ்கிய தங்கச் சுரங்கம்! 9 தொழிலாளிகள் பலி, 17 பேரின் நிலை என்ன?

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் மூழ்கிய தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளர்கள் பலியானது குறித்து...

In Indonesia, it has been confirmed that 9 workers trapped in a flooded gold mine have died.

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கிய சுரங்கத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள்.... - AP

Updated On :

இந்தோனேசியாவில், வெள்ளத்தில் மூழ்கிய தங்கச் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 9 பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு ஜாவா மாகாணத்தின் போகோர் பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில், கடந்த திங்கள்கிழமை (நவ. 23) சட்டவிரோதமான முறையில் தங்கத் துகளைத் திரட்ட தொழிலாளர்கள் உள்ளே சென்று பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கனமழையின் காரணமாக அருகிலுள்ள செரு ஆற்றில் திடீரென வெள்ளம் ஏற்பட்டு சுரங்கத்துக்குள் வெள்ள நீர் புகுந்ததில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

ஜகார்த்தா நகரத்தின் மலைப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 300 அடி ஆழம் கொண்ட அந்தச் சுரங்கத்தில், வெள்ள நீர் சூழ்ந்தபோது 11 தொழிலாளர்கள் மட்டும் உடனடியாக மற்றொரு வழியாக வெளியேறியதாகவும், வெள்ளநீரை உள்ளூர் மக்களே மோட்டார்கள் வெளியேற்ற முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களில் இதுவரை 9 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சுரங்கத்தில் சிக்கிய 17 தொழிலாளர்களின் நிலைகுறித்து இதுவரை எந்தவொரு தகவலும் தெரியவரவில்லை. மேலும், மருத்துவப் பணியாளர்கள், தீயணைப்புப் படையினர், காவல் துறையினர், தன்னார்வலர்கள் என 325 பேர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்தச் சுரங்கம் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதால், வெள்ளம் ஏற்பட்டதும் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்தோனேசியாவில், கைவிடப்பட்ட சுரங்கங்களில் மீதமுள்ள தங்கத் துகள்களைத் தேடி பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொடர்ந்து நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பேரிடர்களில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

In Indonesia, it has been confirmed that 9 workers trapped in a flooded gold mine have died.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.