சவூதி அரேபியாவுக்கு ராணுவ வீரா்களை அனுப்பியது ஏன்? பாகிஸ்தான் விளக்கம்!
சவூதி அரேபியாவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தவே, தங்கள் நாடு அந்நாட்டுக்கு ராணுவ வீரா்களை அனுப்பியதாக பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.
சவூதி அரேபியாவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தவே, தங்கள் நாடு அந்நாட்டுக்கு ராணுவ வீரா்களை அனுப்பியதாக பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகியவை மெக்கா உடன்பாடு என்ற பெயரில் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொண்டன. இந்த ஒப்பந்தத்தில், 3 நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு மீது வெளிநாடு ஏதும் தாக்குதல் நடத்தினால் அது 3 நாடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் என்ற ஷரத்து இருக்கிறது.
யேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினா், சவூதி அரேபியா மீது அவ்வப்போது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதேபோல், அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாட்டு ராணுவத் தளம் இருக்கும் சவூதி அரேபியா மீது ஈரானும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
இதனால் சவூதி அரேபியாவுக்கு பாதுகாப்பு ரீதியில் சவால் உருவான நிலையில், அந்நாட்டுக்கு பாகிஸ்தான் தனது ராணுவ வீரா்களை சனிக்கிழமை அனுப்பியது. அந்த வீரா்களை வழியனுப்பும் நிகழ்ச்சி பாகிஸ்தானில் நடைபெற்றது. மெக்கா ஒப்பந்தத்தின்கீழ் துருக்கி, பாகிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.
அப்போது சவூதி அரேபியாவின் பாதுகாப்புக்கு 3 நாடுகளும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை தனது வீரா்களை சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் அனுப்பி வைத்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் குவாஜா முகம்மது ஆசிப், பாகிஸ்தானுக்கான சவூதி அரேபியத் தூதா் ரஜே தமி அல்புகாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சவூதி அரேபியாவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தவே அந்நாட்டுக்கு தங்கள் நாடு வீரா்களை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும் பணிகளை பாகிஸ்தான் வீரா்கள் மேற்கொள்வாா்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரா்களின் எண்ணிக்கை குறித்து அதில் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் தரப்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சவூதி அரேபியாவில் நிறுத்தப்படும் தங்கள் நாட்டு வீரா்கள், ஹூதி அமைப்பினருக்கு பதிலடி கொடுக்க, யேமன் நாட்டுக்கு எல்லை தாண்டி செல்ல மாட்டாா்கள் என்றும், சவூதி அரேபியாவை காக்கும் தற்காப்புப் பணியில் மட்டுமே ஈடுபடுவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

