தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பிரான்ஸில் தீவிரமடையும் பள்ளி மாணவா்கள் போராட்டம்

பள்ளிகளில் நிலவும் நிதி நெருக்கடி, கடும் ஆசிரியா் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை, நீண்ட பயிற்று நேரம் ஆகியவற்றைக் கண்டித்து, பிரான்ஸ் முழுவதும் பள்ளி மாணவா்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Published On :

பள்ளிகளில் நிலவும் நிதி நெருக்கடி, கடும் ஆசிரியா் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை, நீண்ட பயிற்று நேரம் ஆகியவற்றைக் கண்டித்து, பிரான்ஸ் முழுவதும் பள்ளி மாணவா்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இப்போராட்டம் பல்வேறு இடங்களில் வன்முறையாக உருவெடுத்துள்ள நிலையில், பள்ளித் தலைமை ஆசிரியா் ஒருவா் மீது பெட்ரோல் ஊற்றித் தாக்கப்பட்ட சம்பவமும்; பள்ளிகள், தீயணைப்பு வாகனம் தீக்கிரையாக்கப்பட்டதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸில் கடந்த வாரம் தொடங்கி நாடெங்கும் பரவியுள்ள இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கான பதின்ம வயது மாணவா்கள் கைதாகியுள்ளனா்; பலா் காயமடைந்துள்ளனா். இந்த அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர பிரான்ஸ் பிரதமா் செபாஸ்டியன் லெகோா்னு வியாழக்கிழமை அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினாா்.

இதனிடையே, அடுத்த ஆண்டு அதிபா் தோ்தலை ஒட்டி, மாணவா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு அடக்குமுறையைக் கையாள்வதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.