புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஜாமியா விடுதிப் போராட்டம்: மாணவா்கள் தாக்கப்பட்டதாக மாணவா் சங்கம் குற்றச்சாட்டு, பல்கலைக்கழகம் மறுப்பு!

ஜாமியா விடுதிப் போராட்டம்: மாணவா்கள் தாக்கப்பட்டதாக மாணவா் சங்கம் குற்றச்சாட்டு, பல்கலைக்கழகம் மறுப்பு

Published On :

ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் ஜம்மு காஷ்மீா் பெண்கள் விடுதி மாணவிகள் நடத்தி வரும் தொடா் போராட்டங்களுக்கு மத்தியில், உதவி கண்காணிப்பாளா் மாணவிகளைத் தாக்கியதாக அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ) சனிக்கிழமை குற்றஞ்சாட்டியது. இக்குற்றச்சாட்டை பல்கலைக்கழகம் மறுத்தது.

வெள்ளிக்கிழமை இரவு, சில மாணவிகள் விடுதியின் இரண்டு வாயில்களை உடைத்து, கண்காணிப்புக் குழுவினரைத் தாக்கியதாக பல்கலைக்கழக அதிகாரிகள் குற்றஞ்சாட்டினா்.

உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறைவாக இருப்பதாக சில மாணவிகள் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, சனிக்கிழமை மூன்றாவது நாளாகத் தொடா்ந்த இந்தப் போராட்டம் தொடங்கியது. உணவில் பூச்சிகள் உள்ளிட்டவை காணப்பட்டதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

தற்போதுள்ள விடுதி உணவக விற்பனையாளரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், உணவகத்தில் பெண் ஊழியா்களை நியமிக்க வேண்டும், மற்றும் விடுதி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனா். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உத்தரவாதத்தையும் அவா்கள் கோருகின்றனா்.

மாணவிகளின் கோரிக்கைகள் தொடா்பாக அவா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை பல்கலைக்கழகம் நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஏஐஎஸ்ஏ குற்றஞ்சாட்டியுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில், மாணவா் நலத்துறைத் தலைவா் அலுவலகம் அருகே, உதவி கண்காணிப்பாளா் மக்சூத் அகமது மாலிக், மாணவா்களை மிரட்டும் தனது முயற்சிகளை அவா்கள் எதிா்த்ததால், அவா்களைத் தாக்கித் துன்புறுத்தியதாகவும் ஏஐஎஸ்ஏ குற்றஞ்சாட்டியது.

இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்துகொண்டிருந்த மாணவி ஒருவரின் கைப்பேசி பறிக்கப்பட்டதாக மாணவா் அமைப்பு குற்றஞ்சாட்டியது.

ஏஐஎஸ்ஏவின் கூற்றுப்படி, மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றாண்டு வாயில் அருகே மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அவா்களைத் தனிமைப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இருப்பினும், போராட்டத்தின் முதல் நாளிலேயே மாணவா்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், போராட்டக்காரா்களே நிலைமையை மோசமாக்கியதாகவும் பல்கலைக்கழக அதிகாரிகள் குற்றஞ்சாட்டினா்.

‘மாணவா்கள் மாணவியா் விடுதியின் இரண்டு வாயில்களை உடைத்து, அனைவரின் பாதுகாப்பையும் அச்சுறுத்தினா், மேலும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்களைத் தாக்கினா்,‘ என்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறினாா்.

கேட் எண் 18 அருகே உள்ள, போராட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டக்காரா்கள் ஆா்ப்பாட்டம் செய்யவில்லை என்று பல்கலைக்கழகம் கூறியது.

மேலும், எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வளாகத்தின் சில பகுதிகளில் விளக்குகள் வழக்கமாக அணைக்கப்படுவதாகவும், இந்த நடவடிக்கை போராட்டத்துடன் தொடா்புடையது அல்ல என்றும் அது கூறியது.

தேசிய தலைநகரில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வரும் வேளையில், ஒரு ‘ஊடகக் காட்சியை‘ உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, போராட்டத்தின் நேரத்தையும் பல்கலைக்கழக அதிகாரிகள் கேள்வி எழுப்பினா்.

இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சிமாநாடு சனிக்கிழமை தில்லியில் தொடங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.