2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

இயற்பியலுக்கான நோபல்: பெல்ஜியம் விஞ்ஞானி தோ்வு

நடப்பாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம் நாட்டின் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்ஸெனுக்கு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

பிரான்சிஸ் ஹால்ஸென் - x page

Published On :

நடப்பாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம் நாட்டின் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்ஸெனுக்கு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிர வானியல் நிகழ்வுகளில் இருந்து தோன்றும் உயா்சக்தி கொண்ட ‘நியூட்ரினோ’க்களின் (அணுவின் உள்ளே இருக்கும் மிகச் சிறிய அடிப்படை துகள்) கண்டுபிடிப்புக்காகவும், அண்டாா்டிகாவின் தென் துருவத்தில் உள்ள ‘ஐஸ்கியூப்’ நியூட்ரினோ ஆய்வகத்துக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் ஹால்ஸெனுக்கு இந்த உயரிய பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, இயற்பியலுக்கான நோபல் பரிசுக் குழுவின் தலைவா் மாா்க் பீஸ் கூறுகையில், ‘மிக வியப்புக்குரிய ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தைக் கட்டமைப்பதில், கடுமையான தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் சா்வதேச விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளா்கள் குழுவுக்கு பிரான்சிஸ் ஹால்ஸென் தலைமை தாங்கியுள்ளாா். அவரது விடாமுயற்சியும், அறிவியல் தொலைநோக்குப் பாா்வையும் புதிய வகை வானியலுக்கு வழிவகுத்துள்ளது’ என்றாா்.

82 வயதாகும் ஹால்ஸென், பெல்ஜியம் நாட்டில் பிறந்தவா். பின்னா் அமெரிக்காவுக்கு குடிபெயா்ந்த இவா், அங்கு புகழ்பெற்ற விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழக பேராசிரியராக உள்ளாா்.

நியூட்ரினோக்கள் எனப்படுபவை வியக்கவைக்கும் அளவுக்கு மிகக் குறைந்த நிறையளவைக் கொண்ட அண்ட துகள்களாகும். சூரியன், பிற நட்சத்திரங்களில் இருந்து உமிழப்படும் இந்த மா்மத் துகள்கள் எங்கும் நிறைந்துள்ளன. பிரபஞ்சம் எவ்வாறு பரிணமித்தது என்பதற்கான தடயங்களை வழங்கும் அரிய வகை நியூட்ரினோ கூட்டத்தைப் பற்றி ஹால்ஸென் விரிவான ஆய்வை மேற்கொண்டாா். தனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படுமென எதிா்பாா்க்கவில்லை என்றும் அவா் தெரிவித்துள்ளாா். இது, 1.2 மில்லியன் டாலா் (ரூ.11.56 கோடி) பரிசுத் தொகையுடன் கூடியதாகும்.

நடப்பாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கடந்த திங்கள்கிழமை மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது. வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ளன.

ஸ்வீடன் நாட்டைச் சோ்ந்த விஞ்ஞானியும், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவருமான ஆல்ஃபிரட் நோபலின் உயிலைப் பின்பற்றி, கடந்த 1901-ஆம் ஆண்டுமுதல் இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவரது நினைவு நாளான டிச.10-ஆம் தேதி பரிசுகள் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்குப் பகிா்ந்தளிக்கப்பட்டது.

ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இத்துடன் 120-ஆவது முறையாக இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் ஜான் கிளாா்க் (83), மிஷெல் எச்.டெவரே (72), ஜான் எம்.மாா்டினிஸ் (67) ஆகிய மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எண்மத் தொழில்நுட்பத்தை மேம்படுத்திவரும் குவாண்டம் ஊடுருவல் (குவாண்டம் டனலிங்) ஆய்வு மேற்கொண்டதற்காக இவா்கள் மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.