
வடமேற்கு பாகிஸ்தானில் காவலர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!
வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த தாக்குதலில் 2 காவலர்கள் பலியானது பற்றி..

பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு
வடமேற்கு பாகிஸ்தானில் காவலர்கள் மீது ஆயுதமேந்திய மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூத்த அதிகாரி உள்பட இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கார்க் மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்போ, தனிநபரோ இதுவரை பொறுப்பேற்கவில்லை.
காவல்துறையின் தகவலின்படி, நியூ கார்பா பகுதியில் பண்டா தாவூத் ஷா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் மீது ஆயுதமேந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி தாவூத் கான், காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காவலர்களைத் தாக்கிய பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் பெருமளவிலான காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். மேலும், அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
தீவிரவாத வன்முறை, ஆப்கானிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகளின் நடமாட்டம் மற்றும் தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றால் கைபர் பக்துன்க்வா மாகாணம் பல ஆண்டுகளாகத் தொடர் அமைதியின்மையை எதிர்கொண்டு வருகிறது.
நவம்பர் 2022-ல் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள மாகாணங்களில் தாக்குதல்களை நடத்துவதற்குத் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் காரணமென மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






