கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!

யேமனில் அரசுப் படைகள் - ஹௌதிகள் இடையே கடும் மோதல்! 2 நாள்களில் 81 பேர் பலி!

யேமனின் அரசுப் படைகளுக்கும் ஹௌதிகளுக்கும் இடையேயான மோதல்களில் 81 பேர் கொல்லப்பட்டது குறித்து...

Clashes between Houthi rebels and Yemen government Forces

யேமனில் ஹௌதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையேயான மோதலில் 81 பேர் கொல்லப்பட்டனர்... - ஏபி

Published On :4 செப்டம்பர் 2026, 4:02 pm IST

யேமனின் அரசுப் படைகளுக்கும், அந்நாட்டின் கிளர்ச்சிப் படையான ஹௌதிகளுக்கும் இடையேயான மோதல்களில் 81 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனின் செங்கடலையொட்டியுள்ள பகுதிகளிலும், தயீஸ் மாகாணத்திலும் அரசுப் படைகளுக்கு எதிராக ஹௌதிகள் கடந்த வியாழக்கிழமை (செப். 3) தரைவழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். அங்குள்ள ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் மூலம், மோகா எனும் யேமனின் முக்கிய துறைமுகத்தை முடக்கவும், பாப் அல்-மண்டாப் நீரிணை அருகிலுள்ள பகுதிகளைக் கைப்பற்றவும் ஹௌதிகள் முயன்று வருவதாக, யேமன் படைகள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து, ஹௌதிகளின் தாக்குதல்களுக்கு அரசுப் படைகள் பதில் தாக்குதல்கள் நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், யேமன் ராணுவத்தின் செங்கடல் தளங்களில் பணியாற்றிய 24 வீரர்களும், தயீஸ் பகுதியில் பணியாற்றிய 15 வீரர்களும் ஹௌதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், யேமன் அரசுப் படைகளின் தாக்குதலில் 42 ஹௌதி கிளர்ச்சிப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக, அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவக் குழுவினர் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் பெற்ற யேமன் அரசுக்கும், அந்நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கும் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இருதரப்புக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், அமெரிக்கா தொடுத்த போரில் ஈரானுக்கு ஆதரவாக ஹௌதிகள் களமிறங்கியதால் மீண்டும் யேமனில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that 81 people were killed in clashes between Yemen's government forces and the Houthi rebels.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.