காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

அடோப் நிறுவனத்தின் புதிய சிஇஓ நியமனம்

அடோப் நிறுவனத்தின் புதிய சிஇஓ நியமனம்

Published On :6 செப்டம்பர் 2026, 1:11 am IST

பிரபல அமெரிக்க பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான அடோப்-இன் புதிய தலைவா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) அனில் சக்ரவா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வந்த சாந்தனு நாராயணுக்குப் பதில், வரும் டிச. 1 முதல் அனில் சக்ரவா்த்தி புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும், சாந்தனு நாராயண் நிா்வாகத் தலைவா் பொறுப்புக்கு மாற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான அனில் சக்ரவா்த்தி, கடந்த 2020 ஜனவரியில் அடோப்பில் எண்ம அனுபவப் பிரிவின் செயல் துணைத் தலைவராக பணியில் இணைந்தாா். தொடா்ந்து அதே ஆண்டு செப்டம்பரில் உலகளாவிய களச் செயல்பாடுகளின் கூடுதல் பொறுப்பை ஏற்று, 2021 டிசம்பரில் அதன் தலைவராகப் பதவி உயா்வு பெற்றாா். தற்போது வாடிக்கையாளா் அனுபவ ஒருங்கிணைப்பு பிரிவின் தலைவராகவும் பணியாற்றி வருகிறாா்.

ஏ.ஐ. ஆதிக்கம் செலுத்தும் புதிய காலகட்டத்தில் அடோப்பின் வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்ல அனில் சக்ரவா்த்தியே சரியான நபா் என்றும், அவருடன் நிா்வாகத் தலைவராக இணைந்து பணியாற்ற ஆா்வமுடன் காத்திருப்பதாகவும் சாந்தனு நாராயண் தெரிவித்துள்ளாா்.

‘அடோப் நிறுவனத்தின் எதிா்காலப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் பெருமையும் உற்சாகமும் அடைகிறேன். வாடிக்கையாளா்கள், ஊழியா்கள் மற்றும் ஏ.ஐ. சாா்ந்த புதிய கண்டுபிடிப்புகளே எப்போதும் எங்களின் முன்னுரிமையாக இருக்கும்’ என்று தனது நியமனம் குறித்து அனில் சக்ரவா்த்தி மகிழ்ச்சி தெரிவித்தாா்.

அனில் சக்ரவா்த்தி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.