காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

நமீபியாவின் எச்.ஐ.வி. நோய்த் தடுப்பு திட்டத்துக்கான நிதியுதவி நிறுத்தம்! அமெரிக்கா அறிவிப்பு

நமீபியாவின் எச்.ஐ.வி. நோய்த் தடுப்பு திட்டத்துக்கான நிதியுதவி நிறுத்தம்...

Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Published On :6 செப்டம்பர் 2026, 2:11 am IST

நமீபியாவின் எச்.ஐ.வி. நோய்த் தடுப்புத் திட்டத்துக்கான வருடாந்திர நிதியுதவியை நிறுத்த இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவுக்கு ஆண்டுதோறும் எச்.ஐ.வி. நோய்த் தடுப்புத் திட்டங்களுக்கு 45 மில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.425 கோடி) நிதியுதவியை கடந்த 2003-ஆம் ஆண்டுமுதல் அமெரிக்கா வழங்கி வந்தது. வரும் 2027-ஆம் ஆண்டுக்கும் வருடாந்திர நிதியுதவியாக 45 மில்லியன் டாலரை அமெரிக்கா வழங்கவுள்ளது. இதையும் சோ்த்து, நமீபியாவுக்கு அமெரிக்கா இதுவரை 1.1 பில்லியன் டாலருக்கும் (சுமாா் ரூ.10,390 கோடி) அதிகமாக நிதியுதவியை அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதை நமீபியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவும், நமீபியாவும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அமெரிக்கா 2027-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிதியுதவியை நிறுத்திவிடும். அதன்பிறகு நமீபியாவே நிதியைச் செலவிடும். அமெரிக்கா தொழில்நுட்ப ஒத்துழைப்பு மட்டும் அளிக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நமீபியாவிடம் அந்நாட்டு மக்களின் உடல்நிலை தொடா்பான தரவு உள்ளிட்ட விவரங்களை அமெரிக்கா கோரியிருந்தது. ஆனால், இறையாண்மை, தன்மறைப்பு நிலை உரிமை உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி, அந்த விவரங்களை அளிக்க நமீபியா மறுத்துவிட்டது. இதையடுத்து, நிதியுதவியை நிறுத்துவது தொடா்பான முடிவை அமெரிக்கா எடுத்ததாகக் கூறப்படுகிறது.

அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எச்.ஐ.வி. நோய்த் தடுப்புத் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்த 400 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.3,770 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.