முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவுக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா!

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய நமீபியா 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.

படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :3 செப்டம்பர் 2026, 7:14 pm IST

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய நமீபியா 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.

நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நமீபியா முதலில் விளையாடியது.

கெர்ஹார்டு எராஸ்மஸ் அசத்தல்; ஜிம்பாப்வேவுக்கு 157 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய நமீபியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெர்ஹார்டு எராஸ்மஸ் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 48 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, அலெக்ஸாண்டர் 29 ரன்கள், லோரன் ஸ்டீன்கேம்ப் 14 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஜிம்பாப்வே தரப்பில் பிராட் ஈவன்ஸ் மற்றும் மடிகிமு தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிளெஸ்ஸிங் முசராபானி மற்றும் கேப்டன் சிக்கந்தர் ராஸா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

Summary

Batting first in the match against Zimbabwe in the tri-nation T20 series, Namibia scored 156 runs for the loss of 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.